சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உரும்கி என்னும் நகரில் 21 மாடிகளை கொண்ட அடுக்குமாடு குடியிருப்பில் நேற்று இரவு தீடிரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Categories
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து… கோர சம்பவத்தில் 10 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!!
