Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி போலி பில் போட முடியாது…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. ஆனால் அப்போ போது ரேஷன் கடைகளில் பல முறை கேடுகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொண்டு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பது மற்றும் அரிசி மூட்டைகளை மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது அதனை மற்ற கடைகளில் அதிக விலைக்கு விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்ற வருவது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இது போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷனில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் சமயத்தில் அவர்கள் வாங்கியதாக அவர்களின் மொபைல்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாக புகார் இழந்துள்ளது. இதனால் இது போன்ற போலி பில் போடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அனைத்து ரேஷன் கடை ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |