ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது.
கம்போடியாவில் நேற்று ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜு நாத் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது. ஒரு நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்துதல். ஆனால் அதற்கு அவர்களது அலட்சியம் மட்டுமே காரணம் என கூறி வருகின்றனர்.
அதற்கு அலட்சியம் இனி ஒரு பதிலாக இருக்கக் கூடாது. மேலும் பயங்கரவாதிகளை பணப்பரிமாற்றத்திற்கும், ஆதரவாளர்களை சேர்ப்பதற்கும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் தொடர்புகளை உருவாக்குகிறார்கள். இந்நிலையில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பான உறுப்பினராக மனிதாபிமான உதவிகள் மற்றும் உணவு தானியங்களை பெரிய அளவில் விரிவு படுத்துதலில் இந்தியா தனது கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என அவர் கூறியுள்ளார்.