தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும் எம்எல்ஏவுமான ரூபி மனோகரன் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ஆம் தேதி கே எஸ் அழகிரி மற்றும் ரூபி மனோகரன் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் ரூபி மனோகரனை நீக்க வேண்டும் என 64 மாவட்ட தலைவர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூபி மனோகரன் தற்போது கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அடுத்து நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராகி உரிய ஆதாரங்களை ரூபி மனோகரன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்…. சற்றுமுன் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவிப்பு….!!!!
