கட்சிக்கு கலங்கம் விளைவித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கட்சிக்குள் இரண்டு மனிதர்களுக்கு தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர்கள் அதை பேசி இருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் நம்முடைய விசாரணை கமிட்டி நாளை திருப்பூரில் சந்திக்கிறார்கள். அதன்பிறகு நமக்கு தகவல் கொடுப்பார்கள். என்னை பொருத்தவரை ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். தவறு யார் செய்திருந்தாலும் நாங்கள் விடப்போவது கிடையாது.
நாளை விசாரணை கமிட்டி ரிப்போர்ட்டில் நாளை மாலைக்குள் கொடுக்க சொல்லி இருக்கிறேன். 7 நாட்கள் கூட இல்லை. எனவே வேகமாக இரண்டு பேரையும் சந்தித்து இரண்டு பேரும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறேன். நாளைக்குள் ரிப்போர்ட் என்னுடைய கைக்கு வந்துவிட்டது என்றால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நம்முடைய கட்சியில் விடுவது கிடையாது. நாங்கள் பொது வெளியில் பேசவில்லை, திமுக கட்சிக்காரர்கள் போன்று பொதுவெளியில் மைக் பிடித்து பெண்களை ஆபாசமாக பேசவில்லை, தனிப்பட்ட முறையில் தான் பேசினோம் என்று ஏதாவது காரணத்தை சொன்னாலும் கூட அது யாராலும் தப்ப முடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறியுள்ளார்.