விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் இப்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவு என மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது. சென்ற வாரம் இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து நிவாஷினி எலிமினேட் ஆனார். இதையடுத்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகும் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டில் அமுதவானன் செயல்பட்டு இருக்கிறார். அதாவது அமுதவானன் போட்டியாளர் அனைவரும் பயன்படுத்தும் பாத்ரூம் மூடியிருக்கும் போது அருகே நின்று எட்டி பார்த்திருக்கிறார். தற்போது அமுதவானனின் இந்த செயல் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
https://twitter.com/ahem_built/status/1595282026240053248?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595282026240053248%7Ctwgr%5E606b50aa57b5458c9ac851cc080ec286fce4d53c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Famuthavanan-behaviour-in-bigg-boss-house-1669183929