கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பெண்கள் குளியல் அறையில் ரகசிய கேமரா வைக்க முயன்ற சுபம் ஆசாத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் அங்குள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அந்த வாலிபரை கைது செய்து நடத்தப்பட்ட விசாரணையில் இதற்கு முன்னதாக குறைந்தது 2000 பெண்களின் அந்தரங்க வீடியோக்களை அவர் பதிவு செய்தது தெரியவந்துள்ளது.
கல்லூரி குளியல் அறையில் கேமராவை பொருத்த வந்தபோது மாணவிகள் சத்தமிட்டதால் தப்பி ஓடி உள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை வைத்து அவரை காவல்துறையினர் அடையாளம் செய்து கைது செய்துள்ளனர். பின்னர் ஆசாத்திடம் இருந்து 1200 பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடங்கிய செல்போன் கைப்பற்றப்பட்டது. இந்த பயங்கர சம்பவம் குறித்து காவல்துறையினர் கூடுதல் விசாரணை நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.