Categories
சினிமா தமிழ் சினிமா

“சிறந்த இயக்குனர் மூலம்தான் சிறந்த நடிகராக புகழ்பெற முடியும்”… எஸ்.ஜே.சூர்யா ஓபன் டாக்..!!!

வெப் தொடரின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா பங்கேற்று பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து  படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சமீபத்தில் மாநாடு, டான் ஆகிய படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தற்போது இவர் பொம்மை, மார்க் ஆண்டனி, ஆர்.சி 15 போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனையடுத்து தற்போது இவர் இயக்குனர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் ”வதந்தி” என்னும் வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த வெப்தொடர் வருகிற டிசம்பர் 2ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளதாவது, திறமையான இயக்குனர்களின் படைப்பின் மூலமாகத்தான் ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் வதந்தி என்னும் இத்தொடரில் நடித்ததால் சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகின்றேன். உண்மை நடக்கும் பொய் பறக்கும் என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி பகுதியில் இருக்கும் மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |