பிரபல நடிகை விவாகரத்து செய்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை மானசி நாயக். இவர் சென்ற வருடம் பிரதீப் கரேரா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சென்ற சில வாரங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கின்றது. இருவரும் விவாகரத்து செய்து பிரிய போவதாக செய்திகள் பரவியது. மேலும் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரவர் இணையதள பக்கத்திலிருந்து நீக்கியதும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகை மானசி அதை உறுதிப்படுத்தி இருக்கின்றார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நாங்கள் இருவரும் பிரிவதாக வெளியான வதந்திகள் உண்மைதான். நான் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளேன். என்ன தவறு நடந்தது என சொல்வது சரியாக இருக்காது. ஆனால் அது வேகமாக நடந்து விட்டது. குடும்பம் நடத்த ஆசைப்பட்டு விரைந்து திருமணம் செய்து தான் அங்கு நடந்த தவறு. ஒரு பெண்ணாக எனக்கும் சுயமரியாதை உள்ளது. ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுத்து போக முடியாது என தெரிவித்துள்ளார்.