கூகுள் நிறுவனம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் பயனாளர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தற்போது பண்டிகை காலம் நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் பரிசு கூப்பன், பரிசு பொருள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். இதனால் தற்போது மோசடிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நாள்தோறும் 1,500 கோடி தேவையற்ற மின்னஞ்சல்கள் பயனாளர்களிடம் சேராமல் தடுக்கப்படுகிறது. இதனையடுத்து 99.9 சதவீதம் விளம்பர, மோசடி, முறைகேடு தவறான மிஞ்சல்கள் மூலம் நடைபெறுகிறது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மோசடியாளர்கள் நம்பிக்கையானவர்கள் போல பேசி ஏமாறும் நபர்களுக்கு பரிசு பொருள் தருவதாக ஆசை காட்டி அவர்களது கிரெடிட் கார்டு எண்ணை கேட்கிறார்கள்.
இதை நம்பும் மக்கள் கிரெடிட் கார்டு எண்ணை கொடுக்கிறார்கள். பின்னர் அவர்கள் பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகவும் கூறி மோசடி செய்கின்றனர். இந்நிலையில் அறக்கட்டளை என்ற பெயரில் நன்கொடை கேட்டு வரும் அழைப்புகளிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்நிலையில் சில வேலைகளில் சந்தா புதுப்பிப்பு போன்ற மின்னஞ்சல்கள் வரும். அதில் சில குறிப்பிட்ட வயது உடையவர்களை குறி வைத்து மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கிரிப்டோ முறையிலான மோசடிகளும் கடந்த சில நாட்களாக நடக்கிறது என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.