Categories
மாநில செய்திகள்

“மாற்றத்தை உருவாக்குபவள்”…. கோவையில் பெண் மேயர்களுக்கான சிறப்பு கூட்டம்…. இனி வேற லெவல் ஆக்ஷன் தான்….!!!!!

கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்டரங்கில் மாற்றத்தை உருவாக்குபவள் என்ற பெயரில் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது தேசிய மகளிர் அணி சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த 22-ம் தேதி தொடங்கப்பட்ட கூட்டமானது 3 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையம்‌ செய்துள்ளது. இந்த கூட்டத்தில் 6 மாநகராட்சி பெண் மேயர்கள், 3 நகராட்சி பெண் துணை தலைவர்கள் மற்றும் 16 பெண் நகராட்சி தலைவர்கள் என மாநிலம் முழுவதும் இருந்து 35 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாமை 5 கட்டங்களாக தமிழகம் முழுவதும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆளுமை நிறைந்த இடத்தில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் இருக்கிறது. ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த நகராட்சிகளில் நீங்கள் வேலை பார்க்கிறீர்கள். இதில் உங்களுடைய பங்களிப்பு தான் மிகவும் முக்கியம். பெண் நிர்வாகிகளை பைத்தியம் என கூறி பல்வேறு விதமாக கேலி செய்வார்கள். அதையெல்லாம் கடந்து நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார். மேலும் பாலின அடையாளத்தை எப்போதும் தடையாக கொண்டுவரக் கூடாது என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Categories

Tech |