Categories
அரசியல் தேசிய செய்திகள்

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து… டிரெண்டாகி வரும் #2CModelOfGujarat ஹேஸ்டேக்…!!!!

27 வருட கால பாஜக ஆட்சியை விமர்சித்து ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது.

குஜராத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக முன்வைத்துள்ள #2CModelofGujarat என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருவது பாஜகவினரை அதிர்ச்சடைய செய்துள்ளது. இந்த நேரத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி  என மும்மூனை போட்டி ஏற்பட்டுள்ளது. 27 ஆண்டுகாலமாக அங்கே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிராக கடும் எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது.

சென்ற இரண்டு நாட்களாக குஜராத் மாடலுக்கு எதிராக 2சி மாடல் ஆப் குஜராத் என்ற பெயரில் புதிய ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகின்றது. இதில் 7000 அரசு பள்ளிகள் மூடல், நாட்டின் முதல் 50 பல்கலைக்கழகங்களில் ஒரு குஜராத் பல்கலைக்கழகம் கூட இடம் பிடிக்காதது, நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் தனியார் ஹோட்டல் கட்டப்பட்டது போன்றவை இடம் பிடித்துள்ளன.

அதேபோல கடந்த மூன்று ஆண்டுகளில் அதானி துறைமுகங்கள் மூலம் 5,222 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டது, மோர்பி பால விபத்தில் 136 பேர் இறந்தது போன்ற பதிவு செய்யப்படுகின்றன. இப்படி ஆயிரக்கணக்கான ஹேஷ்டேக்குகளுடன் ட்ரெண்டாகி வருவது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சடைய செய்துள்ளது.

Categories

Tech |