சுதந்திரா கட்சி இலங்கை மந்திரிகள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்துள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தலைமையிலான ஆட்சியில் நிமல் சிறிபாலா டி சில்வா என்பவர் சிவில் விமான போக்குவரத்து மந்திரியாகவும், மகிந்த அமர வீரா என்பவர் வேளாண் மந்திரியாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இந்நிலையில் மேற்கூரிய மந்திரிகளையும், அதே கட்சியில் உள்ள 3 இளநிலை மந்திரிகளும் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுவதாக மத்திய குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி சுதந்திரா கட்சி கூறியுள்ளதாவது, ஆட்சியில் பங்கேற்பதில்லை என்ற மத்திய குழுவின் முடிவை மீறி ஆட்சியில் பங்கேற்றதால், விளக்கத்திற்கு பதில் அளிக்கும் வரை அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். ஆனாலும் மந்திரி சபையில் இருந்து அவர்கள் நீக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.