இப்போது மாதந்தோறும் லட்சக்கணக்கான பயனாளர்கள் EPFO கணக்கில் சேர்வதால், அவர்களும் தங்களின் ஆன்லைன் நாமினேஷனை தாக்கல் செய்யவேண்டும். ஆகவே நீங்கள் இதுவரை உங்களது நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை எனில், ஆன்லைனில் எப்படி செய்வது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். முதன் முதலில் உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி UAN போர்ட்டலில் லாகின் செய்யவும். இதை முதல் முறையில் நீங்கள் லாகின் செய்கிறீர்கள் எனில் இதற்கு பாஸ்வேர்டை உருவாக்கவும். இச்செயல்முறையை முடித்தப் பிறகு பின்வரும் வழிமுறைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
# முதலாவதாக போர்ட்டலில் லாகின் செய்த பிறகு “இ-நாமினேஷன்” என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.
# பேமிலி டிக்ளரேஷன் பக்கத்தின் கீழ் ஹேவிங் பேமிலி ஆப்ஷனில் ஆம் என்பதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# “குடும்ப விபரங்களைச் சேர்” என்பதைக் கிளிக் செய்து, இவற்றில் நீங்கள் ஒன்றுக்கும் அதிகமான நாமினிகளைச் சேர்க்கலாம்.
# உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார்எண், பெயர், பிறந்ததேதி, உங்களுடன் இருக்கும் உறவு, முகவரி மற்றும் புகைப்படம் ஆகிய விவரங்களை நிரப்ப வேண்டும்.
# அதன்பின் மொத்த தொகையை அறிவிக்க, நாமினேஷன் விபரங்களைக் கிளிக் செய்யவேண்டும்.
# அடுத்ததாக “Save EPF nomination” என்பதனைக் கிளிக் செய்யவேண்டும்.
# பின் ஆதார் OTPஐ உருவாக்குவதற்கு இ-சைன் என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண்ணில் அனுப்பப்பட்ட OTPயை சப்மிட் செய்யவும்.