விஜய் டிவி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சண்டைகள், பிரச்சினைகள் மட்டுமின்றி என்டர்டைன்மெண்டுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் டாஸ்க் வீட்டை நீதிமன்றமாக மாற்றிவிட்டார்கள். பிக் பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகளை நீதிமன்றத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் புது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சாவித் திருட்டு வழக்கிற்கு சிவின் அவர்கள் வாதாட போகிறார்கள் என்று அசிம் அடக்கமாக அறிவிப்பதோடு புரொமோ வீடியோ வெளியாகி உள்ளது. நான் சாவியை எடுத்து வைத்தது சீக்ரெட் டாஸ்கின் ஸ்ட்ராடஜியே தவிர ஏ.டி.கே. மீது இருந்த சுய காழ்ப்புணர்ச்சி அல்ல என்று வழக்கறிஞர் ஷிவின் வாதிட்டார். இதனையடுத்து அசீமிடம் குறுக்கு விசாரணையை விக்ரம் செய்தார். சாவியை எடுத்து வைத்ததற்கான காரணம் என்ன அது என்ன? அது என்ன ஸ்ட்ராடஜி? ஒரு மனுஷன் காலில் பூட்டு போட்டு இருக்கு. மனிதாபிமனதோடு நாம் நடந்து கொள்ள வேண்டும். காலை அவிழ்க்கணும் யாராவது சாவியை கையில் வைத்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று அவர் கேட்டாரா இல்லையா என அசீமிடம் விக்ரம் கேட்டார்.
#Day45 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/rceoOJAVn3
— Vijay Television (@vijaytelevision) November 23, 2022
அதற்கு அசீம், நிச்சயமா கேட்டார் என பதில் அளித்தார். அப்படி கேட்கக்கூடிய ஒரு நபர் சாவி வாங்கி பாக்கெட்டில் வச்சுக்குவாரா என்ற விக்ரம் மீண்டும் அசிமிடம் கேள்வி எழுப்பினார். நேற்று நீதிபதி நாற்காலியில் அமர்ந்திருந்த ஏ.டி.கே. பேசினார். ஏன் கோபப்பட்டு கத்தக்கூட செய்தார். ஆனால் இன்று நீதிபதியாக இருப்பவர் மிக்சர் மாமா என பெயர் வாங்கிய ராம். நீதிபதி நாற்காலையில் அமர்ந்தும் கூட அந்த மனிதர் எதுவும் பேசாமல் சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனை பார்த்து பிக்பாஸ் பார்வையார்களோ பார்த்து கொஞ்ச நேரத்துல மேஜையில் படுத்து தூங்கி விட போகிறார் அந்த நீதிபதி என கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சத்தியமா முடியல பிக் பாஸ், இந்த நீதிமன்ற டாஸ் கொடூர மொக்கையாக இருக்கிறது. ஒரு வாரம் எப்படி தான் ஓட்டுவது என்று தெரியவில்லை என்று முழுக்க புலம்பியே ஓட்டி விடுவாங்க போல எங்களை பார்த்தால் உங்களுக்கு பாவமாக தெரியவில்லையா பிக் பாஸ் என்று தெரிவித்துள்ளனர்.