தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் தங்கலான் என்ற படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் படமாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி, மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட உள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இந்த பூஜை நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித், நடிகர்கள் விக்ரம், கலையரசன், ஆர்யா, சிவகுமார் நடன இயக்குனர் சாண்டி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்திற்காக நடிகர் சியான் விக்ரம் வித்யாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் நீண்ட அடர்த்தியான தாடியுடன் விக்ரம் மாஸ் லுக்கில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“With great beard comes great responsibility!” 😉 #Thangalaan pic.twitter.com/h9iH5s6EIn
— Vikram (@chiyaan) November 22, 2022