Categories
மாநில செய்திகள்

சிறுபான்மையினர்களுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை….. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு அரசு பல சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக சிறுபான்மையினருக்கு கடன் உதவிகளும் வழங்கப்படுகின்றன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுபான்மையினருக்கு தொழில் மற்றும் கல்வி கடன் வழங்கப்படுகிறது.

இதில் சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள் கடன் பெற விரும்பினால் அவர்களின் வருமானம் வருடத்திற்கு ஒரு லட்சம் இருபதாயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அதுவே கிராமப்புறமாக இருந்தால் 98 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக நான்கு சதவீதம் வட்டியில் பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். இந்த கடன் உதவியை பெற விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். மேலும் இது குறித்த தகவல்களுக்கு 9840984176 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |