Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் நாளை (நவம்-24) இங்கெல்லாம் பவர் கட்… உங்க ஊரு இருக்கான்னு பார்த்துக்கோங்க…!!!

நாளை வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம், உடையாபட்டி உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதுபோல உடையாப்பட்டி துணை மின் நிலையத்தில் அவசரகால மின் பராமரிப்பு நடைபெறவுள்ளது. இதனால் வீரபாண்டி, புத்திர கவுண்டம்பாளையம் துணை மின் நிலையங்களில் கீழ் குறிப்பிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகின்றது.

வீரபாண்டி துணை மின் நிலையத்தில் ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், மருளையம்பாளையம், பெத்தாம்பட்டி, ராஜபாளையம், எட்டி மாணிக்கப்பட்டி, கூலிப்பட்டி, ராக்கிபட்டி, முத்தனம்பாளையம், எஸ்.பாப்பாரப்பட்டி, சென்னைகிரி, வீரபாண்டி, ஏரிக்காடு, கோணநாயக்கனூர், பாலம்பட்டி, அரசம்பாளையம், புதுப்பாளையம், பைரோஜி, வாணியம்பாடி, அரியானூர் உள்ளிட்ட இடங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

புத்திர கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் அபிநவம், ஏத்தாப்பூர், வீரகவுண்டனூர், புத்திர கவுண்டம்பாளையம், காந்தி நகர், தளவாய்பட்டி, தென்னம்பிள்ளையூர், உமையாள்புரம், அரியப்பாளையம், ஓலப்பாடி, எரும சமுத்திரம், பெத்தநாயக்கன்பாளையம், கல்யாணகிரி, சின்ன சமுத்திரம், முத்தானூர், கல்லேரிப்பட்டி, வைத்தியகவுண்டன்புதூர், படையாச்சியூர் உள்ளிட்ட இடங்களில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது.

இதுபோல உடையாபட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மலையருவி, கே.என்.காலனி உள்ளிட்ட மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் காமராஜ் நகர் காலனி, மாரியப்பன் நகர், எஸ்கே டவுன்ஷிப், தாதம்பட்டி, வ.உ.சி நகர், விநாயகர் கோவில் தெரு, பட்ட நாயக்கர் காடு, பெரியார் நகர், தியாகி நடேசன் தெரு உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. மேற்கண்ட தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் முல்லை, ரவிராஜன், குணவர்த்தினி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |