மின்வேலியில் சிக்கி கடமான் பரிதாபமாக உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரன்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக சோலார் மூலம் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கடமான் மின்வேலிஅருகே சென்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் கடைமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது, 3 வயதுடைய ஆண் கடமான் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. மின்வேலி அமைத்த தனியார் எஸ்டேட் நிர்வாகம் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.