2 பேரை கொலை செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேலா பவுடி காட்டில் வாலிபர் மற்றும் இளம் பெண் என 2 பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதலில் இது கள்ளத்தொடர்பு அல்லது கவுரவக் கொலையாக இருக்கும் என நினைத்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அதே பகுதியில் நடமாடிய பாலேஷ் குமார் என்ற சாமியாரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவர் பத்வி குடாவில் உள்ள நந்தினி வித்யாவில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களது கஷ்டங்களை தீர்க்க வழி கேட்டு இவரிடம் வந்துள்ளனர். அதைப்போல் சோனி குன்வர் என்ற பெண் தனது திருமண வாழ்க்கையில் குழப்பமாக இருப்பதாக கூறி சாமியாரை சென்று பார்த்துள்ளார். இதனையடுத்து அவருக்கும் ராகுல் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது சிறிது நாட்கள் கழித்து கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை கேட்ட ராகுலின் மனைவி அவர்களிடம் தகராறு செய்துள்ளார். மேலும் இருவரையும் பிரிக்குமாறு சாமியாரிடம் கூறியுள்ளார்.
இதனைக் கேட்ட சாமியார் பூஜை செய்ய வேண்டும் என கூறி ராகுலின் மனைவியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். ஆனால் இருவரும் பிரியவில்லை. இந்நிலையில் ராகுலின் மனைவி சாமியாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் சாமியார் தனது பெயர் கெட்டுவிடும் என நினைத்து சோனு மற்றும் ராகுலை சந்தித்து இருவரும் பிரிந்து விடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாமியார் 5 ரூபாய் பெவிகுவிக் பசையை அதிகமாக வாங்கி அதை ஒரு பாட்டில் சேகரித்தார். பின்னர் ராகுலையும் சோனுவையும் தனியான சந்தித்துள்ளார். மேலும் அவரிடம் நீங்கள் பிரியப் போவதில்லை என கூறியுள்ளார். இதனை கேட்ட அவர்கள் தனிமையில் உல்லாசத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென சாமியார் தான் மறைத்து வைத்திருந்த பெவிகுவிக்க்கை இருவர் மீதும் ஊத்தியுள்ளார். இதனால் அவர்களது கண்ணை திறந்து பார்க்க சிரமப்பட்டு உள்ளனர். அப்போது சாமியார் கத்தி மற்றும் கற்களால் தாக்கி இருவரையும் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.