பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு கலங்கம் விளைவிப்பதாக கூறி ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி தொடர்பாக தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அண்ணாமலையை நடவடிக்கையை ஏற்றுக் கொள்கிறேன் என காயத்ரி ரகுராம் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது . தேசத்திற்காக உழைப்பேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை தேவை என பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், சூர்யா சிவா பேசியது சைதை சாதிக் பேசியதை விட மோசமானது. நான் பாஜகவிற்கு எதிராக இருப்பதாக யார் கூறினாலும் அவர்களுக்கு நான் எதிரானவள். அண்ணாமலை அந்த கருத்தை தெரிவித்தால் அவரையும் நான் எதிர்ப்பேன். முதல்வர் சூர்யா சிவா மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயத்ரி ரகுராம் ஆவேசமாக பேசியுள்ளார்.