கம்போடியா நாட்டின் ஆசியான் அமைப்பு பாதுகாப்பு துறை மந்திரிகள் கூட்டம் நடக்கும் நிலையில், அதில் மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்போடியா நாட்டில் ஆசியான் அமைப்பு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான ஒன்பதாம் வருடாந்திர கூட்டம் இன்று நடந்திருக்கிறது. கம்போடியா நாட்டின் துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் சாம்டெக் பிச்சே சேனா டிபான் அழைப்பு விடுத்ததால் பாதுகாப்பு துறை மந்திரி ராஜிநாத் சிங் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
நாளை ஆசியான் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டு பிரதமரையும் அவர் சந்திக்க உள்ளார். பாதுகாப்பு அமைச்சர்களோடு ஆலோசனை மேற்கொண்டு, இரண்டு நாடுகளின் பாதுகாப்பு உட்பட பல துறைகளில் உறவை பலப்படுத்துவது பற்றி அவர் பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.