Categories
தேசிய செய்திகள்

WOW: ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக…. குறும்படத் திருவிழா… இந்திய ராணுவம் ஏற்பாடு….!!!!

ஜம்மு காஷ்மீர் லடாக்கில் முதல்முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவமானது ஏற்பாடு செய்திருக்கிறது.

எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் சினிமா திறமையை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த குறும்படத் திருவிழாவை நடத்த இருக்கிறது. இவற்றிற்கு “தில் மாங்கோ மோர்” என பெயரிட்டுள்ளனர்.  இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல்பலி அவர்களின் யோசனையின் படி ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த “தில் மாங்கோ மோர்”  திட்டம்.  5 -15 நிமிடமுள்ள குறும்படங்களை ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் ஆன்லைனில் டிசம்பர் 10ம் தேதிக்குள் சம்ர்பிக்கவும்.

இத்திருவிழாவின் இறுதிநாளில் பாலிவுட்டின் பிரபலங்கள் பங்கேற்க இருக்கின்றனர். முதல் பரிசு- 1 லட்சம், 2-வது பரிசு- 75 ஆயிரம் மற்றும் 3வது பரிசு- 50 ஆயிரம் ஆகும். அத்துடன் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். விருது பெற்ற இயக்குநர் இம்தியாஸ் அலி, ராகுல் மித்ரா, ஒம்ஷ் சுக்லா போன்றோரின் கீழ் வழிகாட்டுதல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் தான் ஜம்முவில் முதல் மல்டிபிளக்ஸ் சினிமா திரையரங்குகள் திறக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |