Categories
தேசிய செய்திகள்

PERSONAL LOAN வாங்க போறீங்களா?… எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி தெரியுமா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போதைய காலக்கட்டத்தில் குறைவான தனி நபர் கடன் வட்டி எனில் 8.9% -10.55% ஆகும்.  தற்போது குறைவான வட்டியில் தனி நபருக்கான கடனை வழங்கக்கூடிய வங்கிகள் குறித்து நாம் இப்பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

இந்த வங்கியில் 9.8% வட்டியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபர் கடனானது வழங்கப்படும். 5 வருட கால தவணை திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,574 செலுத்தவேண்டும்.

யெஸ் வங்கி

இவற்றில் 10% வட்டி எனும் அடிப்படையில் தனி நபர் கடனானது வழங்கப்படும். ரூபாய்.5 லட்சம் கடன் பெறும் வாடிக்கையாளர்கள், அதை 5 வருட கால தவணைக்காலத்தில் திருப்பிச்செலுத்த வேண்டும். மாதாந்திர தவணை தொகையானது ரூபாய்.10,624 ஆகும்.

இந்தியன் வங்கி

இந்த வங்கியில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபரின் கடனுக்கு 10.3% வட்டியாகும். இதற்குரிய தவணைக்காலம் 5 வருடங்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,697 செலுத்தவேண்டும்.

ஃபேங்க் ஆப் இந்தியா

இதில் ரூபாய்.5 லட்சத்துக்குரிய தனி நபரின் கடனுக்கு 9.75 % வட்டியாகும். இதற்குரிய தவணைக்காலம் 5 வருடங்கள் ஆகும். ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,562 செலுத்தவேண்டும்.

எஸ்பிஐ வங்கி

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI-யில் 10.55 % வட்டியில் ரூ.5 லட்சத்துக்கான தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. 5 வருட கால தவணைத் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூபாய்.10,759 செலுத்தவேண்டும்.

Categories

Tech |