கர்த்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பணியில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ஹேன்ட் பேக் ஒன்று காணாமல் போனது. அதனை டாமினிக் சரியாக கவனிக்கவில்லை. இதனையடுத்து டாமினிக் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார் கூறிய பதிலை கேட்டு டாமினிக் ஆச்சரியமடைந்தார். அதாவது பெண் காவலர் ஒருவர் டாமினிக்கிடம், “உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட கேமிராக்களை நாங்கள் எல்லா இடத்திலும் பொருத்தியுள்ளோம்.
அதன் முலம் பேக்கை திருடி சென்ற அந்த நபரை நாங்கள் கண்டறிய போகின்றோம். அவரை கண்டுபிடித்த பின் நீங்கள் அவருக்கு என்ன தண்டனை கொடுக்க விரும்புகிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த அந்த நிருபர் காணாமல் போன தன்னுடைய ஹேன்ட் பேக்கை கண்டுபிடித்து கொடுத்தால் மட்டும் போதும் என தெரிவித்துள்ளார். கத்தாரில் கால்பந்து தொடருக்கான பாதுகாப்பு கமிட்டி, அனுபவம் இல்லாத நபர்கள் உட்பட 1,000 ஆண்கள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி கூட்ட நெருக்கடியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவது பற்றி பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.