Categories
தேசிய செய்திகள்

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்கணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…..!!!!

உங்கள் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய-மாநில அரசுகளானது பல்வேறு திட்டங்களை கொண்டுவந்திருக்கிறது. அந்த திட்டங்கள் குறித்து இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா 

பெண் குழந்தைகளின் உயர் கல்வித் தேவைகளை பூர்த்திசெய்யும் அடிப்படையில் மத்திய அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. சென்ற 2015ம் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் இத்திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்கைத் திறக்கலாம். இதில் குறைந்தப்பட்ச தொகையாக ரூபாய். 250 -ரூ.1.5 லட்சம் வரை வைப்பு நிதியை செலுத்தமுடியும். இந்த திட்டத்தின் முதிர்வுகாலம் 21 வருடங்கள் (அ) குழந்தைகள் 18 வயதை எட்டியவுடன் இந்த பணத்தை நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதற்கு 7.6% வட்டிவிகிதம் கிடைப்பதால் கண்டிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்துக்கான பாதுகாப்பு திட்டமாக அமைகிறது.

பாலிகா சம்ரிதி யோஜனா

நம் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களிலுள்ள பெண் குழந்தைகளுக்கான திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும் எனில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள பெண் குழந்தைகள் இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். அத்துடன் சென்ற 1997 ஆகஸ்ட் 15 (அ) அதற்குபின்  பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் வாயிலாக பெண்களைப் பள்ளிப் படிப்பில் ஈடுபடுத்துவது, குழந்தை திருமணத்தை தடுத்து திருமண வயதை நிர்ணயிப்பது ஆகியவை குறிக்கோளாகும்.

Categories

Tech |