நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் வருடம் தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த பணம் 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என்ற விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் அனைவரும் பிஎம் கிசான் கார்டு புதுப்பிக்க வேண்டியது அவசியம். இந்த திட்டத்தில் இணைய https://pmkisan.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று பதிவு செய்யவும்.