Categories
சினிமா தமிழ் சினிமா

விஜே மா.கா.பா. ஆனந்த், ஆர்.ஜே. விஜய் நடிப்பில்….. உச்சிமலை காத்தவராயன் ஆல்பம் பாடல் வெளியீடு….. செம வைரல்…..!!!!!

பிரபலமான விஜேவாகவும், நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் மா.கா.பா ஆனந்த் மற்றும் ஆர்.ஜே விஜய். இவர்கள் இருவரும் இணைந்து தற்போது ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து நடிகை ஆஷ்னா சவேரியும் ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார். உச்சிமலை காத்தவராயன் என்று ஆரம்பிக்கும் இப்பாடலை ஆனவி இசையமைத்திருக்கிறார்.

அதன் பிறகு சாண்டி நடனம் மாஸ்டராக பணிபுரிய, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் ஆனவி மற்றும் ஜெஸ்லி கிஃப்ட் இணைந்து பாடி இருக்கும் உச்சிமலை காத்தவராயன் பாடலை நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |