Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் கல்லூரியில் பிரியாணி திருவிழா : விதவிதமான பிரியாணிகளை செய்து அசத்திய மாணவர்கள்!

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரி நடத்திய பிரியாணி திருவிழாவில் விதவிதமான பிரியாணிகளை மாணவர்கள் செய்து அசத்தினார்கள்.

ராமலிங்கபுரத்தில் மகளிர் தினத்தை கொண்டாட நினைத்த தனியார் கல்லூரி ஒன்று இளைஞர்களை கவர பிரியாணி தயாரிக்கும் திருவிழாவை ஏற்பாடு செய்தது. இதில் பங்கேற்க பல கல்லூரிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் மாணவர்கள், இளைஞர்கள் என 200 மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

65 குழுக்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்த போட்டியில் மாணவர்கள் செட்டிநாட்டு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி என வகை வகையான பிரியாணிகளை செய்து அசத்தினர். இறுதியாக தயார் செய்யப்பட்ட பிரியாணி வகைகளை வரிசையாக பார்வையாளர்கள் பார்க்கும்வண்ணம் வைக்கப்பட்டது.

பின்னர் திருவிழாவிற்கு வந்த மாணவிகளுக்கு பிரியாணிகள் வழங்கப்பட அதை மாணவிகள் உட்சாகமாக சுவைத்தனர். பெரும்பானோர்களால் விரும்பி சுவைக்கப்படும் உணவுகளை ஆண்களாலும் செய்ய முடியும் என உணர்த்த தான் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது என அக்கல்லூரி முதல்வர் கூறினார்.

இந்த திருவிழாவில் சிறந்த பிரியாணி எது என்பதை அறிய சேலத்தில் சேர்த்த பிரபல ஹோட்டல் உரிமையாளர் நடுவராக நியமிக்கப்பட்டார். அனைத்து பிரியாணி வகைகளையும் சுவைத்து பார்த்து அதில் சிறந்த பிரியாணியை தேர்வுசெய்தார். அதில் வெற்றிபெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Categories

Tech |