நடிகர் ஜீவா நடித்த “வரலாறு முக்கியம்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் “வரலாறு முக்கியம்” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் ஜீவா நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஹீரோயினியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிகுமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார் மற்றும் ஆதிரை போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் “ஜிமிக்கி கம்மல்” பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதனை அடுத்து சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி “வரலாறு முக்கியம்” திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Our next exhilarating project #VaralaruMukkiyam is all set for Dec 9th release. @JiivaOfficial #Santhoshrajan @kashmira_9 @PragyaNagra @tsk_actor@chinnasamy73 @shaanrahman @sakthisaracam @srikanth_nb @vasukibhaskar @saregamasouth @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/zyykujjZgQ
— Super Good Films (@SuperGoodFilms_) November 21, 2022