தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் படத்தை இயக்கினார். இந்த படமும் பாக்ஸ் ஆபிஸ் மிகப்பெரிய சாதனை படைத்தது. தற்போது மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமனன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது 4 வது படைப்பாக ‘வாழை’ படத்தை அவரை தயாரித்து இயக்குகிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை நடிகர் உதயநிதி கலந்து கொண்டு துவங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நான்கு சிறுவர்களை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப் புகழ் பிரியங்கா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். மாமன்னன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வெளியானது. இந்த படம் கபடி மையமாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாரி செல்வராஜ் வாழை படம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.