சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது.
தற்போது வரை சீனாவில் கொரானா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-லிருந்து 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,552-லிருந்து 80,651-ஆக உயர்ந்துள்ளது.
முன்பை விட இறப்பு விகிதம் குறைந்தே வருகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. கூடிய விரைவில் முற்றிலும் இந்த வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தபடும் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.