Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை நிலை குலைய செய்த வெட்டுக்கிகள்… இம்ரான் கான் எடுத்த அதிரடி முடிவு!

பாகிஸ்தான் நாட்டில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் காரணமாக தேசிய அளவிலான அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது 

இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்து புறப்பட்டு சென்ற வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பொருட்களை தின்று அழித்து விட்டன.மேலும் அந்த வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளையும் தின்று அழித்ததால் கால்நடைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது.

Image result for locust attack in Pakistan

இந்நிலையில் வெட்டுக்கிளிகள் எண்ணிக்கை அதிகமானது. காரணம், குறிப்பிட்ட பகுதிகளில் மழை பெய்து காலநிலை மாற்றம் ஏற்பட்டதால் வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் பன்மடங்காகப் பெருகிவிட்டது.இதனால் என்ன செய்வதென்று திக்குக்குமுக்காடி போய் விட்டனர் விவசாயிகள். அதன் காரணமாக கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவியது.

Image result for locust attack in Pakistan

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிரடியாக தேசிய அளவிலான அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் உணவுப் பொருட்களைப் யாரேனும் பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

Categories

Tech |