விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர். தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தன்னுடைய கடின உழைப்பால் இத்தனை நாட்களைக் கடந்த நிவாஸினி கடந்த சில நாட்களில் ஈடுபாடு காட்டாததன் காரணமாக அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவர் ஒரு நாளைக்கு பன்னிரண்டாயிரம் ரூபாயிலிருந்து 18,000 வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் வாங்கி இருந்தால் கூட அவர் 42 நாட்களுக்கு 5 லட்சத்திற்கும் மேல் சம்பளம் பெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது.