ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆதார் கார்டை பல்வேறு முக்கிய ஆவணங்களுட இணைப்பது அவசியமாகிறது. குறிப்பாக வங்கி கணக்கு, செல்போன்இணைப்பு, கேஸ் இணைப்பு ஆகியவற்றுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாகும். இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 31 மார்ச் 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் இணைக்க வேண்டும் என்று அரசு பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இந்நிலையில் தற்போது செயலிழப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.