Categories
சினிமா தமிழ் சினிமா

“காரி” திரைப்படத்தின் வெற்றி விழா…. விஜயகாந்த் சாரை போன்று நானும் வருவேன்…. நடிகர் சசிகுமாரின் நெகிழ்ச்சி பேச்சு….!!!!

நடிகர் சசிகுமார் நடிக்கும்”காரி” திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

அறிமுக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் “காரி” என்ற திரைப்படத்தின் ஹீரோவாக நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஹீரோயினாக மலையாள நடிகை பார்வதி அருண் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் அம்மு அபிராமி, பிரேம், ஜேடி சக்கரவர்த்தி, ஆடுகளம் நரேன், நாகி நீடு மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற நவம்பர் 25ஆம் தேதி வெளியாகயுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகினர், பட குழுவினர் என பலரும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்துள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் சசிகுமார் கூறியதாவது, ” இது எனக்காகவே உருவாக்கப்பட்ட படம். என் மண்ணின் சுவாரசிய கதை. நான் கிராமத்து படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய தயாரிப்பில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து படம் எடுக்க முயற்சித்தேன்.  ஆனால் அது என்னால் முடியவில்லை இருப்பினும் லஷ்மன் குமார் தயாரிப்பில் என்னுடைய ஆசை நிறைவேற்றியுள்ளது என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசமாகவுள்ளது.

மேலும் தயாரிப்பாளர் லஷ்மன் குமார் இயக்குனர் ஹேமந்துக்கு காரே பரிசாக கொடுக்காமல் நடிகர் கார்த்தியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை கொடுக்க வேண்டும். இந்த படத்தில் முக்கியமாக கூற வேண்டியது என்னவென்றால் 18 வகையான மாடுகள் பற்றி சொல்லி இருக்கின்றோம். இந்த திரைப்படத்தில் என்னுடன் நடித்த நிஜமான ஜல்லிக்கட்டு வீரர்கள் எனக்கு பாதுகாப்பாகவும் பக்க பலமாகவும் இருந்தார்கள். இதில் நடித்ததற்காக ரசிகர்கள் என்னிடம் கேட்ட ஒரே பரிசு இந்த திரைப்படம் வெளியாகும் முதல் நாள் முதல் ஷோ எங்களுடன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று கூறினார்கள்.

இந்த படம் ரிலீஸ் நாளான்று அவர்களது ஆசையை நிறைவேற்றுவேன். இதற்கு முன்பெல்லாம் நடிகர் விஜயகாந்த் சார் படப்பிடிப்பின் போது அவரது அலுவலகத்தில் பாாரபட்சமின்றி அனைவருக்கும் சுவையான சாப்பாடு வழங்கப்படுமாம். அதேபோன்று நீண்ட நாளுக்கு பிறகு தயாரிப்பாளர் லஷ்மன் குமார் படப் பிடிப்பிலும் எல்லோருக்கும் சமமான சாப்பாடு வழங்கப்பட்டதை நான் பார்த்தேன். இதற்கு முன்பாக நடித்த படத்தில் சாப்பாடு சரியாக இல்லை. அதனால் தயாரிப்பாளரிடம் என் சம்பளத்தில் கூட கொஞ்சம் பிடித்துக் கொண்டு நல்ல சாப்பாடு போடுங்கள் என்று கூறினேன். அவர் நல்ல சாப்பாடும் போடவில்லை. என்னுடைய சம்பளமும் கொடுக்கவில்லை. இந்த திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டு மக்களுக்காகவே எடுக்கப்பட்ட படம். அனைவரும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு என்னுடைய டைரக்ஷனில் படம் இயக்குகிறேன் அதற்கான அறிவிப்பை இந்தப் படத்தின் வெற்றி விழாவின் போது அறிவிக்கின்றேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |