பிரபல நாட்டில் போதை பொருள் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு இன்று பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்துள்ளது. அதில் எமலிண்டா புவுலினோ டி ரிவாஸ் என்ற பெண் சக்கர நாற்காலி ஒன்றின் உதவியுடன் சென்றுள்ளார். ஆனால் அந்த சக்கரம் சுழலாமல் இருந்துள்ளது. இதனை பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நாற்காலியை சோதனை செய்ய முடிவு செய்தனர்.
அதேபோல் நடத்திய சோதனையில் நாற்காலியின் 4 சக்கரங்களிலும் வெள்ளை நிற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 28 பவுண்டு எடையுள்ள போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3.6 கோடி ரூபாய் ஆகும். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.