Categories
உலக செய்திகள்

ஐ.நா. பருவநிலை மாநாடு…. இழப்பு நிதி வழங்க ஒப்புக்கொண்ட நாடுகள்…. வெளியான தகவல்….!!!!

ஏழை நாடுகளுக்கு இழப்பு நிதி வழங்க சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை சமாளிக்க ஐ.நா.பருவநிலை மாற்ற பணத்திட்டம் கடந்த 1992-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்ததிட்டத்திற்கு 198 நாடுகள் கையெழுத்திட்டது. அதனால் கையெழுத்துட்டு அனைத்து நாடுகளும்  ஆண்டு தோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு கடந்த 6-ஆம் தேதி எகிப்து நாட்டில் மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு வளர்ந்து வரும் நாடுகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், இதன் மூலம் வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய முடியும் எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக இழப்பு மற்றும் தேச நீதியை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |