Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு…. முதல் மந்திரி தகவல்….!!!!

ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.

மங்களூருவில் நேற்று முன்தினம் மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிபுணர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் இந்த ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவத்தின் முதல் கட்ட விசாரணையில் அவை எல்.இ.டி. வெடிபொருள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் இது குறித்து நடத்திய  விசாரணையில் காயமடைந்த நபரின் ஆதார் போலியானது என்று தெரியவந்தது. அதில்  உப்பள்ளி முகவரி இருந்தது.

இந்நிலையில் இது குறித்து போலீசார் பல்வேறு உண்மையான தகவல்களை திரட்டியுள்ளனர். இதன் மூலம் இந்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று தெரியவந்துள்ளது. மேலும் அந்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது. இதனையடுத்து அந்த நபர் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் பகுதியில்  பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இந்த சம்பவம் பயங்கரவாத செயலாக இருக்கலாம் என்று போலீசார் என்னிடம் தெரிவித்தனர். இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் மங்களூரு வந்துள்ளனர்.மேலும் அவர்கள் கர்நாடகா போலீசாருடன் இணைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் விரைவில் உண்மைகள் வெளிவரும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |