Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் உருவாகும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் விதமாக சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அடிப்படை கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் மின் இணைப்பு உள்ளிட்ட இதர பணிகள் நடைபெற்று வருவதால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |