Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தற்போது சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியம். இந்த ஆதார் எண்ணை மற்ற முக்கிய ஆவணங்களுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. பண பரிவர்த்தனைகளுக்கும் வங்கி  சார்ந்த அனைத்து வேலைகளுக்கும் பான் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணம். எனவே பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவகாசம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பு வருடத்திற்குள் பான் எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு உங்களின் பான் கார்டு செயலிழந்து போய்விடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. அதனால் www.incometax.in என்ற இணையதளம் மூலமாக பான்  கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |