Categories
உலக செய்திகள்

அழகி போட்டி மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பெண்… ஏன் தெரியுமா…? உலகையே பதற வைத்த சம்பவம்…!!!!!

மியான்மர் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே அழகி ஒருவர் கண்ணீர் சிந்திய  விஷயம் உலகையே பதற  வைத்ததுள்ளது.

மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஹான் லே என்பவர் பாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச அழகி போட்டியில்  மியான்மர் சார்பாக பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அழகி போட்டி நடைபெற்ற போது மேடையிலேயே ஹான்லே கண்ணீர் சிந்திய  விஷயம் உலகையே அதிர வைத்தது. மியான்மரில் கடந்த 2021 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ராணுவ அரசை விமர்சனம் செய்த நடிகர் முதல் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 3 வருடங்கள் முதல் மரண தண்டனை வரை விதிக்கப்பட்டுள்ளது.

அழகி போட்டி நடைபெறும் மேடையில்  தனது நாட்டு மக்கள் படும் அவதிகளை கூறி ஹான்லே கண்ணீர் வடித்துள்ளார்.  இந்த சம்பவத்திற்கு பின் அவரால் மியான்மருக்கு திரும்பி செல்ல முடியாது. மேலும் தாய்லாந்தும் அவரை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. எனவே ஹான்லே கனடாவில் அடைக்கலம் தேடினார். இந்நிலையில் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷான்லே தன்னுடைய நாட்டில் நடக்கும் வன்முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தன்னுடைய கதையை பகிர்ந்து வருகிறார்.

Categories

Tech |