Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

அண்மை காலமாக ஆதார் வைத்திருப்போருக்கு அரசானது ரூ.4,78,000 கடனாக அளிப்பதாக செய்தி ஒன்று சமூகஊடகங்களில் வைரலாகி வருகிறது. இச்செய்தியின் உண்மைத்தன்மையை PIB கண்டறிந்து இருக்கிறது. இது தொடர்பாக PIB தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டில் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த வைரல் செய்தி முற்றிலும் போலியானது என PIB தெரிவித்து இருக்கிறது. இதுபோன்று எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசானது செயல்படுத்தவில்லை.

அத்துடன்  இது போன்ற வைரல் பதிவுகளை யாரிடமும் பகிராமல் கவனமாக இருக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது சமூகஊடக கணக்கு (அ) வாட்ஸ்அப்பில் வரும் செய்திகள் பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் PIB வாயிலாக உண்மையைச் சரிபார்க்கலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணைப்பைப் பார்வையிடவும். இது தவிர்த்து 8799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ (அ) [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தகவல்களை பெறலாம்.

Categories

Tech |