நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரண்டு பேரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து நான்கு மாதங்களே ஆன நிலையில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராகியுள்ளனர். இது பல சர்ச்சைகளுக்கு ஆளானது. இருப்பினும் சட்டங்களை முறையாக பின்பற்றி தான் குழந்தை பெற்றெடுத்ததாக விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில இரட்டை குழந்தைகள் பிறந்ததில் இருந்து இருவரும் ரொம்ப பிசியாகஇருக்கிறார்களாம். குழந்தைகளை பார்த்துக் கொள்ள மூன்று பணியாட்களும் நியமிக்கப் பட்டிருக்கிறார்களாம். ஆனாலும் நயன் முழுமையாக குழந்தைகளோடு இருக்க விரும்புவதால் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒரு வருடத்திற்கு பிரேக் எடுக்க போகிறாராம். இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.