WhatsApp மூலமாக உங்களின் ஆதார் மற்றும் பான்கார்டை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். தற்போது அதனை WhatsApp வழியே எப்படி பெறுவது ? என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
# உங்களது மொபைலில் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்ய வேண்டும்.
# MyGov ஹெல்ப் டெஸ்க்கைத் தொடர்புகொள்ள +91 9013151515-க்கு “Hii”என அனுப்பவேண்டும்.
# DigiLocker (அ) CoWIN சேவைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க சாட்பாட் உங்களைக் கேட்கும். பின் டிஜிலாக்கர் சேவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
# தங்களிடம் DigiLocker கணக்கு இருத்தல் வேண்டும்.
# அதன்பின் உங்களது 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
# உங்களது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ உள்ளிடவேண்டும்.
# உங்களது DigiLocker கணக்குடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை chatbot தற்போது காண்பிக்கும்.
# உங்களது ஆதார் (அ) பான்கார்டுக்கு அருகே காட்டப்படும் விருப்ப எண்ணை உள்ளிட வேண்டும்.
# ஆவணம் தற்போது சாட்பாக்ஸில் PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.