Categories
மாநில செய்திகள்

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு…. நாளைக்குள் இடங்களை தேர்வு செய்ய வேண்டும்…. வெளியான தகவல்….!!!!!

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடங்களை நாளைக்குள் தேர்வு செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில்  கலந்து கொண்டு ஒதுக்கிட்டு ஆணை பெற்றவர்கள்  கல்லூரிகளில் சேர்ந்தனர். அதைப்போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆணை பெற்ற மாணவர்களும் தங்களது கல்லூரிகளில் சேர்ந்தனர். இந்த நிலையில் முதல் சுற்றில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 140 எம்பிபிஎஸ் இடங்களும், கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 2 எம்பிபிஎஸ் இடங்களும் காலியாக உள்ளது.

இதனைத் தவிர்த்து அரசு ஒதுக்கீட்டில் பிடிஎஸ் படிப்பில் 788 இடங்கள் காலியாக உள்ளது. மேலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில்  83 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் 28 இடங்கள் நிரம்ப வில்லை. இந்த இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கடந்த வியாழன் கிழமை தொடங்கியது. மேலும் இது நாளை மாலை 5 மணி வரை இணையவழியில்  விருப்பமான இடங்களை தேர்வு செய்யலாம் எனவும்  அதன் முடிவுகள் வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |