Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… நிரந்தரமாக மூடப்பட்ட 14 % சிறு- குறு நிறுவனங்கள்… வெளியான தகவல்….!!!!

கொரோனா தொற்று வேகமாக பரவியதை அடுத்து 2020 மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்களது தொழிலை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான சிறு-குறு நிறுவனங்கள் தொழிலை நடத்தமுடியாமல் நிரந்தரமாக மூடப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக இந்தியாவானது பொருளாதார இழப்பை எதிர்கொண்டது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 14 சதவீதம் சிறு- குறு நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோர்களுக்கான உலகளாவிய கூட்டணி அமைப்பு (கேம்), கொரோனா காலத்தில் இந்தியாவில் தொழில்துறை எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 14 % சிறு- குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. அதாவது பணப்புழக்கம் இல்லாதது காரணமாக இந்நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது. வங்கிகளில் இந்நிறுவனங்களில் 40 சதவீத நிறுவனங்களுக்கு கடன் மறுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தொழிலை தொடர்ந்து நடந்த முடியாத நெருக்கடிக்கு அந்நிறுவனங்கள் உள்ளாகியது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |