Categories
அரசியல் மாநில செய்திகள்

45ஆண்டுகள் பொதுச் செயலாளர்…. இந்தியாவிலே அதிக நாள் பொறுப்பு வகித்தவர் ….!!

திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மரணமடைந்தது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பேராசிரியர் கஅன்பழகன். இனமான பேராசிரியர் என்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியால் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் நிலத்தின் மீதும் , தமிழ் மக்கள் மீதும் அவருக்கு கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக அவர் இனமான பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 1977 இல் இருந்து திமுகவின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளர் பதவி வகித்த இவர் தான் இந்தியாவில் அதிக நாள் பதவி வகித்தார் என்ற சாதனையை பெற்றார். எந்த ஒரு இயக்கத்திற்கும் ஒரே நபர் இவ்வளவு நீண்ட நாட்களாக பொதுச்செயலாளர் பணியாற்றியது கிடையாது.

தற்போதைய திமுக முக.ஸ்டாலின் பெரியப்பா என்று அன்போடு அழைப்பார். கடந்த 2018 டிசம்பர் மாதம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் அவர் பங்கெடுத்துக் கொண்டார். அதுதான் அவருக்கு கடைசி விழாவாக இருந்தது. மற்றபடி அவர் வீட்டில் இருந்தபடியே ஓய்வு பெற்று வந்தநிலையில் தற்போது அவர் உயிரிழந்தார் என்ற செய்தி திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |