பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நான் திரைப்படங்களுக்கு நல்ல ரசிகன் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாமக கட்சி திரைப்படங்களுக்கு எதிரான கட்சி என்ற ஒரு கருத்து திரையுலக பிரபலங்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது. இந்த தகவல் உண்மை கிடையாது என்று தற்போது பாமக நிறுவனர் ராமதாஸ் மறுத்துள்ளார். இது குறித்து ராமதாஸ் கூறியதாவது, பாமக கட்சியினர் திரைப்படங்களுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் என்ற தகவல் உண்மை கிடையாது.
நான் நல்ல திரைப்படங்களுக்கு எப்போதுமே சிறந்த ரசிகன். நம்முடைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சீரழிக்காத திரைப்படங்களுக்கு எப்போதுமே பாமக ஆதரவு கொடுக்கும். திரைப்பங்களின் மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற வலுவான எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு என்று கூறியுள்ளார்.