Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கீழே கிடந்த செல்போன்…. நேர்மையாக ஒப்படைத்த மாணவர்கள்… பாராட்டிய போலீசார்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில்வே கேட்பகுதியில் வசிக்கும் பத்ரிநாத் தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பத்ரிநாத் தனது  நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையில் ஒரு செல்போன் கிடப்பதை சிறுவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் சாலையில் கிடந்த செல்போனை  எடுத்து வடமதுரை காவல் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமனிடம் ஒப்படைத்தனர். செல்போனை நேர்மையாக ஒப்படைத்த மாணவர்களை போலீசார் பாராட்டியுள்ளனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி செல்போனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Categories

Tech |